‘தளபதி 69’ எனும் இன்னும் தலைப்பு வைக்கப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்த பிறகு, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.
எச்.வினோத் இயக்கும் இப்படம், 2025 அக்டோபரில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அத்திரைப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அப்படத்தில் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடிப்பார் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அதை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளிவரவில்லை.
விஜய்யும் பிரகாஷ் ராஜும் இதுவரை பல வெற்றிப் படங்களில் கூட்டு சேர்ந்துள்ளனர். ‘கில்லி’ (2004), ‘சிவகாசி’ (2005), ‘போக்கிரி’ (2007), ‘வில்லு’ (2009) உள்ளிட்டவை அவை.
‘தளபதி 69’ படத்தில் சிம்ரன், பூஜா ஹெக்டே, சமந்தா, மோகன்லால், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன், சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ள பாபி தியோல், ‘தளபதி 69’ல் வில்லனாக நடிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் ‘தளபதி 69’ படத்தை ‘கேவிஎன் புரோடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
தம் கடைசிப் படத்துக்குப் பெறும் சம்பளத்தின் அடிப்படையில், ஆக அதிகச் சம்பளம் பெறும் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
‘தளபதி 69’ படத்துக்காக அவருக்கு ரூ.275 கோடி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

