நடிகை பிரீத்தி முகுந்தன் முதன்முறையாக ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைத் தந்துள்ள ஹரிஷ், தற்போது ‘நூறு கோடி வானவில்’, ‘டீசல்’ உள்ளிட்ட நான்கு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்.
அவற்றுள் ‘லிஃப்ட்’ பட இயக்குநர் வினித் பிரசாத் இயக்கத்தில் நடிக்கும் படமும் ஒன்று.
இதில் மலையாள நடிகர் செம்பியான் வினோத், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
படத்தின் நாயகி யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில். தற்போது பிரீத்தி முகுந்தன் ஒப்பந்தமானது தெரிய வந்துள்ளது.
அண்மையில் ‘ஆச கூட’ எனும் இசைப்பாடலுக்கு நடனமாடி இருந்தார் பிரீத்தி முகுந்தன். இதற்கு ‘யூ டியூப்’ தளத்திலும் இளையர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.