நாவலைத் தழுவிய படத்தில் பிருத்விராஜ்

1 mins read
150e80f1-1fbe-408f-9c41-c22230d52e5f
‘விலாயத் புத்தா’ படத்தில் பிருத்விராஜ். - படம்: இந்திய ஊடகம்

பிருத்விராஜ் மீண்டும் நாவலைத் தழுவி எடுக்கும் படத்தில் நடிக்கிறார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயத் புத்தா’ படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியாகியுள்ளது.

ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சுராஜ் வெஞ்சாரமூடு, டிஜே அருணாச்சலம், டிஎஸ்கே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘விலாயத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா’ பட பாணியில் சந்தன மரக் கடத்தலை மையமாகக் கொண்டு கதைக்களம் நகர்கிறது.

முன்னதாக பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலைத் தழுவிய படத்தில் நடித்திருந்த பிருத்விராஜ் மீண்டும் நாவலை தழுவிய படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்