மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் சுகுமாரன், தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூருடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
‘சாம் பகதூர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மேக்னா குல்சார் இயக்கி வரும் புதிய படம் ‘தாய்ரா’ (Daaira). இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிக்கிறார். அவருடன் முதன்முறையாக பிருத்விராஜ் சுகுமாரன் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.
இதுதவிர, பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்கும் படத்திலும் பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘வாரணாசி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார்.

