நடிகர் ரவி தேஜா தனது 77வது படம் தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளார். இந்த முறை, அவர் ‘மஜிலி’ படத்தின் மூலம் பெயர் பெற்ற இயக்குநர் சிவ நிர்வாணத்துடன் கைகோத்துள்ளார்.
ரவி தேஜாவின் பிறந்தநாளை (ஜனவரி 26) முன்னிட்டு தயாரிப்புக் குழுப் படத்தின் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ரவி தேஜா ஐயப்ப பக்தராகக் காட்சியளிக்கிறார். படத்திற்கு ‘இருமுடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் ரவி தேஜாவின் அண்மைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
மேலும் ரவி தேஜாவுக்கு இணையாகப் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் பற்றிய மேல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

