கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் படத்தில் பிரியாமணி

1 mins read
40b15db7-0a2a-4544-bedd-c8a7f43ace47
பிரியாமணி. - படம்: ஊடகம்

இளம் நாயகிகளுக்கு இணையாக தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் நடிகை பிரியாமணி.

2017ஆம் ஆண்டு திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த இவர், 2021ல் மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

தெலுங்கில் ‘விராட பர்வம்’, ‘கஸ்டடி’, இந்தியில் ‘ஜவான்’ ஆகிய படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்த பிரியாமணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் ‘நேர்’ என்ற படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையடுத்து, இந்த ஆண்டு இந்தியில் ‘ஆர்டிகல் 370’, ‘மைதான்’ ஆகிய படங்கள் பிரியாமணி நடிப்பில் வெளியாயின.

இந்நிலையில், இந்த ஆண்டு ‘ஆபிசர் ஆன் டியூட்டி’ என்ற மலையாளப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் பிரியாமணி. பிப்ரவரி 20ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

இதில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ஜித்து அஷ்ஃரப் இயக்கியுள்ளார்.

ஒரு நகைக்கடையில் நிகழும் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்து காவல்துறை நடத்தும் விசாரணை என்ற கதைக்களத்துடன் அதிரடிப் படமாக இது உருவாகிறது.

குறிப்புச் சொற்கள்