ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை வழிநடத்தும் பிரியங்கா சோப்ரா

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை வழிநடத்தும் பிரியங்கா சோப்ரா

1 mins read
a33c6bdd-b8a2-46c8-b7e8-b9a4e1434b2b
பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான நிக் ஜோனாசும். படம்: பிரியங்கா ஃபேஸ்புக் பக்கம் -

வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரைப்பட உலகின் கெளரவ விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் இவ்வாண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர்.

93வது ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.

இம்முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் பார்வையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்பட உள்ளனர்.

இருப்பினும், நேரலையாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டார்.

ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம் பிடித்த நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' தமிழ் திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியது.