ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா

1 mins read
58a0f426-772c-4ccd-8c52-dd15045973b1
பிரியங்கா சோப்ரா. - படம்: ஊடகம்

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க உள்ளார். இதில் கதாநாயகி யார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அண்மையில் ஹைதராபாத்துக்கு வந்திருந்தார். அவர் ராஜமௌலியைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. எனினும் மகேஷ்பாபு குறித்த எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்னர், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சிங்கத்தின் புகைப்படம் முன்பு தன் கையில் கடப்பிதழுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் ராஜமௌலி. இதற்கு மகேஷ்பாபுவும் பிரியங்காவும் பின்னூட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து மூவரும் இணைந்து பணியாற்றுவது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்