ராஜமௌலி இயக்கத்தில் ‘வாரணாசி’ படத்தில் மகேஷ்பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அண்மைகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்தியப் படத்தில் நடிக்கிறார்.
அண்மையில் பிரியங்கா சோப்ராவின் சுவரொட்டி ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் மஞ்சள் நிற புடவையில் துப்பாக்கியை வைத்து யாரையோ அவர் குறி வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
அவரது கதாபாத்திரத்தின் பெயர் மந்தாகினி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஹாலிவுட் படங்களில் வாங்குவது போன்று ரூ.30 கோடி சம்பளம் பிரியங்கா சோப்ரா வாங்கி இருப்பதாக டோலிவுட் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

