தென்கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவத் தூதரானார் பிரியங்கா மோகன்

தென்கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவத் தூதரானார் பிரியங்கா மோகன்

1 mins read
094dcc5d-c38a-437e-aa19-5fa24fec523a
தென்கொரிய நாட்டுச் சுற்றுலாத்துறையின் கெளரவத் தூத​ராக பிரி​யங்கா மோகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். - படம்: பிரி​யங்கா மோகன்/எக்ஸ்

தென்கொரியாவின் சுற்​றுலாத் துறைக்​கான கெளரவத் தூத​ராக நடிகை பிரி​யங்கா மோகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

‘நெட்​ஃபிளிக்​ஸ்’ தளத்தில் வெளி​யான ‘மேட் இன் கொரி​யா’ திரைப்​படத்​தில் தென்கொரி​யா​வில் பணிபுரி​யும் தன்​னம்​பிக்கை நிறைந்த பெண்​ணாக பிரி​யங்கா மோகன் நடித்​திருந்​தார்.

இந்​திய மற்​றும் தென்கொரிய நாட்டு ரசிகர்​களிடம் இப்​படம் வரவேற்​பைப் பெற்​றது.

இந்நிலையில் தென்கொரிய நாட்டுச் சுற்​றுலாத்​துறை​யின் கெளரவத் தூத​ராக பிரி​யங்கா மோகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதற்​காக தென்கொரிய சுற்​றுலா அமைப்​புக்கு அவர் நன்றி தெரிவித்துள்​ளார்.

நடிகை பிரி​யங்கா மோகன், தற்​போது கவின் நடிப்​பில் தயா​ராகி வரும் பெயரிடப்​ப​டாத படத்​தி​லும், வெற்​றி​மாறனின் ‘அரசன்’ படத்​தில் சிலம்​பரசன் ஜோடி​யாக​வும் நடித்து வருகிறார்.

இதனிடையே மாரி செல்​வ​ராஜ் இயக்​கும் ‘மஞ்​சணத்​தி’ படத்​தி​லும்​ அவர் நடித்​து வரு​கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்