நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இளம் நடிகை. தற்போது ஒரு புதிய இணையத்தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அதன்படி, ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய இணையத்தொடரில் பிரியங்கா மோகன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கொரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த இணையத் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என்று அறிவித்து உள்ளனர்.