தமிழில் ஒரு வெற்றிப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் பிரியங்கா மோகன்.
தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘ஓஜி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
இதற்கிடையே, நடிகர் கவினுடன் ‘கிஸ்’ என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் பிரியங்கா. இந்தப் படம் வெளியானதும் தனக்கான மதிப்பு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறாராம்.
இதனிடையே, தெலுங்கில் நடிகர் நானியுடன் ஒரு படத்தில் இவரை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக பிரியங்கா எதிர்பார்த்ததைவிட அதிக ஊதியம் பேசப்பட்டுள்ளதாம்.

