நடிகர் தாடி பாலாஜி சிகிச்சைக்கு உதவிய தயாரிப்பாளர்

1 mins read
f2876d41-25d9-4d8e-9e7c-33e903616cd2
தாடி பாலாஜி. - படம்: ஜீ நியூஸ்

தாடி பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவியுள்ளது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் பாலாஜியின் மருத்துவச் செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

செல்வகுமார், முன்பு நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றியவர். இந்நிலையில், தமக்கு அவ்வப்போது உடல்வலி ஏற்பட்டதாகவும் அதற்கு என்ன காரணம் எனப் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு தெரியவந்ததாகவும் தாடி பாலாஜி கூறியுள்ளார்.

அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் அறிவிக்கப்படவில்லை.

அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தாடி பாலாஜி. அண்மைய உடல் பரிசோதனையின்போது பாலாஜிக்கு குடலில் பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அதனால்தான் உடல்வலி ஏற்பட்டுள்ளதா என்று பாலாஜி தரப்பிலும் திரையுலகத்தினர் கேட்டுள்ளனர்.

“எனக்கு மதுப்பழக்கம் இருந்தது உண்மைதான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் மது அருந்துவது இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள வலிக்கும் மது பழக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என பாலாஜியே விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்