இயக்குநர்கள், கதாநாயகர்களாக அவதாரம் எடுத்த காலம்போல, இப்போது தயாரிப்பாளர்களும் கதை நாயகர்களாகி வருகிறார்கள்.
நயன்தாரா நடித்த ‘அறம்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘அயலான்’ ஆகிய படங்களைத் தயாரித்த கோட்டாடி ஜே.ராஜேஷ், இப்போது நாயகனாகக் களமிறங்கிவிட்டார்.
பா.ரஞ்சித்தின் உதவியாளர் ஜேபி தென்பதியன் இயக்கத்தில் ‘அங்கீகாரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள இவர், அடுத்ததும் நாயகனாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘மாமன்’ பிரசாந்த் பாண்டிராஜின் உதவியாளரான ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் பார்க்க ஓரளவு கலையாக, கம்பீரமாக இருந்தால், இயக்குநர்கள் உடனே நடிக்க வைத்துவிடுகிறார்கள்.
இதனால் செலவு குறையும் தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை இளம் இயக்குநர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என விளக்கம் அளிக்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

