அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் காசை வட்டிக்கு விடும் பவுன் தாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த முன்னோட்டக் காட்சி வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இப்படத்தின் முதல் பாடலான ‘தாய் கிழவி வாரா’ பாடலும் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் விளம்பரக் காணொளியை வெளியிட்டுள்ளனர்.
அதில், பள்ளி செல்லும் மாணவனும் மாணவியும் பேருந்தில் காதலிக்கும்போது, மாணவியின் தலையில் அடித்து “பத்து தலைமுறை ஆச்சு பள்ளிக்கூடம் போகறது,” என ராதிகா வசனம் பேசுவது கவனத்தை ஈர்த்ததுடன் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

