‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.
இவர் நடிப்பில் அடுத்து ‘டீசல்’ என்ற படம் வெளியாகிறது. மேலும், நூறு கோடி வானவில், அந்தகாரம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் ஹரிஷ்.
இந்நிலையில், ‘லிஃப்ட்’ பட இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கும் ‘தாஷமகான்’ என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் படத்தில் நடித்துவருகிறார் ஹரிஷ் கல்யாண். இதில் அவரது ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எனினும், இனிமேல்தான் இந்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளனர்.