‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியீடு கண்ட 21 நாள்களில், ரூ.1,700 கோடி வசூல் கண்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் வெளியீடு கண்டதில் இருந்து, ஆகக் குறைவான நாள்களில், அதிக வசூல் ஈட்டிய இந்திய படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சில சர்ச்சைகளில் சிக்கிய போதும், ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் ஏறிக்கொண்டே போகிறது. இப்படத்தின் வசூல் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1,800 கோடியை முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் வெளியானது.
தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர்.
ஃபகத் ஃபாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.