‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல இந்தி நடிகை திரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘புஷ்பா’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலுக்கு சமந்தா கவர்ச்சியாட்டம் போட்டிருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் பாகத்திலும் இதேபோன்ற கவர்ச்சிப்பாடல் இடம்பெறுகிறதாம். இதற்கு தெலுங்கு இளம் நாயகி ஸ்ரீலீலா நடனமாடுவார் எனக் கூறப்பட்டது.
ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக திரிப்தி டிம்ரி ஒப்பந்தமாகி உள்ளதாகவும் அவர் விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒற்றைப் பாடலுக்கு நடனமாட அவருக்குப் பெருந்தொகை ஊதியமாகப் பேசப்பட்டுள்ளதாம். வரும் டிசம்பர் 6ஆம் தேதி அன்று திரைகாண்கிறது ‘புஷ்பா-2’.

