அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதுகுறித்து, நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள பகத்பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா “உண்மையான பகத் பாசில் யார் என்பது ‘புஷ்பா 2’ல் தெரியும்,” என்று கூறினார்.
‘ஒரு ரசிகையாக, அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் என்பதை நம்புகிறேன். ‘புஷ்பா 1’ அவரது பாத்திரத்தை அறிமுகப்படுத்துவதுபோல் இருந்தது. உண்மையான பகத் பாசிலின் நடிப்புத் திறமையை இரண்டாம் பாகம் காண்பிக்கும்,” என்றார்.

