ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரைப்பட முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 வயதான பெண் உயிரிழந்த நிலையில் அவரது 8 வயது மகன் படுகாயமடைந்தார். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அச்சிறுவனுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வருவதாகவும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ‘புஷ்பா 2’ திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. 10 நாட்களில் ‘புஷ்பா 2’ திரைப்படம் 1,292 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பத்தே நாட்களில் ஆயிரம் கோடி வசூலை ‘புஷ்பா 2’ எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன் கைதான நாளை விட அடுத்த நாளில் இப்படம் 71 விழுக்காடு வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.