பாலிவுட்டில் முன்னணி இயக்குநரான ஆர்.பால்கி, முதன்முறையாக தமிழ்த் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.
நடிகர் அமிதாப் பச்சனை வைத்து ‘சீனி கம்’, ‘பா’ போன்ற வெற்றிப் படங்களையும் தனுஷை வைத்து ‘ஷமிதாப்’ படத்தையும் இயக்கியவர்.
அவர் தமிழில் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்கிறார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பால்கி இயக்கத்தில் வெளியான ‘பா’ திரைப்படத்திற்குப் பிறகு, ஏறக்குறைய 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரது இயக்கத்தில் வித்யா பாலன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ‘ஜெயிலர்-2’ படத்தின்மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்குத் திரும்பிய வித்யா பாலன், அதைத் தொடர்ந்து மீண்டும் ஒப்பந்தமான தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.
