‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

1 mins read
61786a15-312a-4833-a08f-3d4fe24b1cdd
ஆர்.ஜே.பாலாஜி. - படம்: ஊடகம்

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி. இயக்குகிறார்.

முதல் பாகத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி ஏன் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமக்கும் படத்தின் தயாரிப்புத் தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, தாம் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை என்று கூறியுள்ளார் பாலாஜி.

“எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்தவித யோசனையும் இல்லை. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் வேறு கதைகளில், வேறு படங்களில் இருந்தன.

“இப்போது என்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சுந்தர்.சி. இப்படத்தை இயக்குகிறார். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

கடந்த 2020ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் ‘மூக்குத்தி அம்மன்’ நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதித்து.

குறிப்புச் சொற்கள்