நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் மீண்டும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.
’ஆறு’ படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார் திரிஷா.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில், சூர்யாவுக்காக அதிரடி வழக்கறிஞர் கதாபாத்திரத்தை கச்சிதமாக உருவாக்கி உள்ளாராம் ஆர்.ஜே.பாலாஜி.
ஏற்கெனவே ‘எதற்கும் துணிந்தவன்’, ‘ஜெய்பீம்’ ஆகிய படங்களில் வழக்கறிஞராக நடித்திருந்தார் சூர்யா. இரு படங்களிலும் அவரது நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது.
அந்த பாராட்டும் வெற்றியும் சூர்யாவின் 45வது படத்திலும் தொடரும் என்கிறாராம் ஆர்.ஜே.பாலாஜி.


