மீண்டும் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

மீண்டும் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

1 mins read
f0873b59-3598-40d8-bc43-e7a7c3b8dd11
ஆர்கே செல்வமணி. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவரானார் ஆர்கே செல்வமணி. அவர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இச்சங்கத்தின் தேர்தல் எதிர் வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இம்முறை 1,800 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில் முக்கியமான பதவிகளுக்குத் தேர்தலுக்கு முன்பாகவே போட்டியின்றி சில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், ஆர்கே செல்வமணி தலைவராகவும் ஆர்வி உதயகுமார் செயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் தேர்வாகி உள்ளனர்.

துணைத் தலைவராக கேஎஸ் ரவிகுமார், பி.வாசு ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்வு செய்யப்படுபவர்கள் மூன்றாண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்