சல்மான் கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி தோல்வியைத் தழுவிய ‘சிக்கந்தர்’ படம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
200 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ராஷ்மிகா, “முருகதாஸ் முதலில் கூறிய கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பின்போது நடிகர்களின் நடிப்பு, படத்தொகுப்பு போன்ற காரணங்களால் கதைக்களம் மாறிவிட்டது. சொன்னது ஒன்றாக இருந்தது, ஆனால் உருவான விதம் வேறாக அமைந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
கதை மாற்றமே படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்ததா என்ற கேள்வியை ராஷ்மிகாவின் இந்தக் கருத்து எழுப்பியுள்ளது.

