இங்கிலாந்தில் உள்ள இசைப்பள்ளியில் கௌரவத் தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற இசை, நாடகம், சமகால நடனத்துக்கான ‘டிரினிட்டி’ இசைப்பள்ளியில் கௌரவத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொறுப்பை பெரும் பாக்கியமாகவும் மரியாதைக்குரியதாகவும் கருதுவதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான உறவை வலுப்படுத்துவதில் தாமும் ஒரு காரணியாக இருப்பதற்காக மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.