இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் மொழிக்கென ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவருக்குச் சொந்தமான ஏஆர்ஆர் (ARR) இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்.
முதற்கட்டமாக, மின்னிலக்க வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சின்னம், மிக விரைவில் கட்டடமாக உருவாகும் என ஏ.ஆர்.ரகுமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் எங்கு மேடையேறினாலும் தமிழுக்கு முன்னுரிமை அளிப்பவர் ரகுமான். ஆஸ்கார் மேடையிலும்கூட தமிழில் பேசினார்.
அவர் தமிழுக்கு நினைவுச் சின்னம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.