ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தையைப் போன்றவர் என, அவரது இசைக்குழுவில் பணியாற்றும் கிடார் இசைக்கலைஞர் மோகினி டே தெரிவித்துள்ளார்.
தங்கள் இருவரது விவாகரத்து குறித்து யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அவர் இன்ஸ்டகிராம் பதிவு மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தனிமை என்ற முடிவு வலி மிகுந்தது. எனவே இந்த முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்.
“ஆதாரமற்ற, தவறான தகவல்கள் பரப்பப்படுவதை ஒருபோதும் ஏற்க இயலாது. நான் பல ஆண்டுகளாக அவரது இசைக்குழுவில் பணியாற்றி வருகிறேன். அவரை என் தந்தையைப் போன்று கருதுகிறேன்,” என மோகினி டே தமது காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானும் மோகினி டேவும் ஒருசில மணி நேர இடைவெளியில், சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்திருந்தனர்.