பிரபலங்கள் தங்கள் சுயசரிதையை எழுதுவது புதிய போக்காக மாறியுள்ளது. பல பதிப்பகங்கள் இதற்காகக் கோடிகளில் சம்பளமும் விற்பனையில் பங்கும் தருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தம் மகள் சௌந்தர்யாவுடன் இணைந்து சுயசரிதையை எழுதிவரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தம் சுயசரிதையை எழுதுகிறார்.
பிரபல இந்திப் பத்திரிகையாளர் ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து அவர் இப்புத்தகத்தை எழுதுகிறார்.
இப்புத்தகத்திற்கு ‘ரஹ்மான்: எ ரினைசன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரினைசன்ஸ் என்றால் மறுமலர்ச்சி என்று பொருளாகும்.
“ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து இப்புத்தகத்தை எழுதிவருகிறேன்,” எனத் தாம் புத்தகம் எழுதுவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“எனது உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள், படைப்பாக்கப் பயணம் பற்றியதாக இப்புத்தகம் இருக்கும். கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிப்பேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


