தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள ராஷி கண்ணா

1 mins read
3032ea68-26a5-4f20-adb9-b12e17813623
ராஷி கண்ணா. - படம்: ஊடகம்

ஒவ்வொரு நடிகையிடமும் ஏதேனும் திறமை இருக்கும்.

நயன்தாரா நன்றாக ‘ஸ்வெட்டர்’ பின்னுவார். ஹன்சிகா நன்றாக ஓவியம் தீட்டுவார்.

பட வேலைகள் இல்லாத நாள்களில் நடிகைகள் இவ்வாறு தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், ராஷி கண்ணா ஆடை வடிவமைப்பில் ஈடுபடுகிறார். குறிப்பாக, மணமக்களுக்கான உடைகளை வடிவமைப்பதில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டுள்ளார்.

இவர் வடிவமைக்கும் ஆடைகள் அணிவதற்கு எளிதாகவும் அணிந்த பின்னர் இதம் தருவதாகவும் உள்ளனவாம்.

மேலும், இந்த உடைகளை தாமே அணிந்து, புகைப்படங்கள் எடுத்து அவற்றைச் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்.

அந்த வகையில், ராஷி கண்ணா அண்மையில் வடிவமைத்து வெளியிட்ட ஆடைகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

“பணத்துக்காக இதை நான் செய்யவில்லை. மணமக்களின் அழகான புன்னகையைப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் நிகர் வேறெதுவும் இல்லை,” என்கிறார் ராஷி.

குறிப்புச் சொற்கள்