இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியுடன் விமான பயணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா.
இந்தப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அண்மையில் லண்டன் சென்ற ராதிகா, நாடு திரும்பும்போது அவர் பயணம் மேற்கொண்ட விமானத்தில் விராத் கோஹ்லியும் இருந்துள்ளார். இதையடுத்து, அவருடன் ‘செல்ஃபி’ படம் எடுத்துக்கொண்டதாக ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
“மில்லியன்கணக்கான மக்களின் இதயங்களில் இருப்பவர் விராத் கோஹ்லி. தனது விளையாட்டுத் திறமையால் நம்மை பெருமைப்பட வைத்தவர். இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததிலும் அவருடன் பயணம் மேற்கொண்டதிலும் மகிழ்ச்சி. மேலும் செல்ஃபி படத்துக்கும் நன்றி,” என்று ராதிகா தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.