தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஷாலிடம் தலைகீழ் மாற்றம்

1 mins read
615b84bd-729b-4bec-b0e8-4f795c787d15
‘மகுடம்’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

புதுப்பொலிவுடன் வலம் வருகிறார் நடிகர் விஷால். அவரது வருங்கால மனைவியும் நடிகையுமான சாய் தன்ஷிகாதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

முன்பெல்லாம் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார், அப்படியே வந்தாலும் கேரவேனை விட்டு வெளியே வரமாட்டார் என்றெல்லாம் விஷாலைப் பற்றி தொடர் புகார்கள் எழும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்.

அடுத்து மகுடம் என்ற படத்தில் நடிக்கிறார் விஷால். (இதே பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யராஜும் ஒரு படத்தில் நடித்திருந்தார்). இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு சமர்த்துப் பிள்ளையாக குறித்த நேரத்தில் வந்து போகிறார் என்று படக்குழுவினர் விஷாலைப் பாராட்டுகின்றனர்.

அதுமட்டுமல்ல, சில நாள்களுக்கு முன்பு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது விஷாலின் கைகள் நடுங்கின, மேடையில் பேச முடியாமல் தவித்தார், ஒரு நிகழ்ச்சியில் திடீரென அழுதார் என்றும் சிலர் கூறினர்.

ஆனால் இப்போது கல்லூரி மாணவரைப்போல் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறார் விஷால். அவரிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்கள் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இதனிடையே, ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் ‘மகுடம்’ படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.

அஞ்சலி, யோகி பாபு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

பிள்ளையார் சதுர்த்தியன்று இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டனர்.

அதில் விஷால் மூன்று விதமான தோற்றங்களில் காட்சியளிப்பதை அடுத்து, அவர் மூன்று வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்