நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருவது தெரியும்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறுக்களையாபட்டி கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு எனும் சிறுவனின் ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார்.
இச்சிறுவன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடி வருகிறான். விஷ்ணுவைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், அண்மையில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் தனது சொந்த கிராமத்தில் குடிநீருக்கு கூட அவதிப்பட வேண்டியிருப்பதாகச் சிறுவன் விஷ்ணு கூறியிருந்தான்.
இதையறிந்த நடிகர் லாரன்ஸ் உடனடியாக குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். இனி குடிநீருக்காக அக்கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. லாரன்சின் செயலைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

