மீண்டும் நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன்

மீண்டும் நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன்

2 mins read
ac7ecd3a-3544-4313-b799-7d896b859002
‘நோவா’ படத்தில் ரைசா வில்சன். - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ‘பிக்பாஸ்’ புகழ் ரைசா வில்சன்.

அதன் பிறகு ‘தனுசு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘எஃப்ஐஆர்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட படங்களில் நடிக்க அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன.

பிறகு யார் கண்பட்டதோ தெரியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தப் பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம்.

இதனால் வருத்தத்தில் இருந்த ரைசாவுக்கு, ஆறுதல் அளிக்க வந்துள்ளது ‘நோவா’ படம்.

ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ படத்தை அடுத்து, ‘ராயல் ஃபார்சுனா’ நிறுவனம் தயாரிக்கும் படம்தான் ‘நோவா’.

இந்நிலையில், விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மைலோ என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

‘யூடியூப்’ புகழ் பைனலி சுவாதிகா, மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, கன்னட நடிகை அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் சந்திரன் இசையமைக்கிறார்.

இது திகில், அறிவியல், கற்பனை கலந்த சிறந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகிறதாம்.

“ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இப்படத்தை அடக்கிவிட முடியாது. ஒவ்வொரு மொழி சார்ந்தும் ஒரு கலைஞரை இப்படத்தில் பங்களிக்க வைத்துள்ளோம். மலையாள வில்லன் நடிகர் டாம் சாக்கோவின் தம்பிதான் ஜோ ஜான் சாக்கோ.

“மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரைசா வில்சன் மீண்டும் நாயகியாக நடிக்கிறார். அவரது அதிரடிக் கதாபாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும்,” என்கிறார் இயக்குநர்.

படத்தின் முக்கியக் காட்சிகளை மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் படமாக்கி உள்ளனர்.

மிக விரைவில் இந்தப் படம் உலகெங்கும் திரைகாண உள்ளது.

குறிப்புச் சொற்கள்