தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருங்கால கணவர் குறித்த ரைசாவின் எதிர்பார்ப்பு

1 mins read
0c1450aa-33ba-4d65-ba3f-3b233b1d66e5
ரைசா வில்சன். - படம்: ஊடகம்

தனது வருங்காலக் கணவர் பொறுமையும் மனிதநேயமும் கொண்டவராக, முக்கியமாக அறிவாளியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார் ரைசா வில்சன்.

தற்போது இவர் தமிழிலும் தெலுங்கிலும் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மைய பேட்டியின்போது, இதுவரையிலான தமது திரைப்பயணம் நிறைய அனுபவங்களைத் தந்து, பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆண்டுகள் கடந்து செல்லும்போது, விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடுகிறது. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டன.

“நான் நீச்சல் உடையை அணிவதைக்கூட விமர்சிக்கிறார்கள். இத்தகைய கருத்துகளைத் தடுக்க முடியாது. படிக்கும் காலத்தில் காதலிக்க விருப்பமில்லை. யாரிடமும் காதலும் வரவில்லை. நான் உண்டு படிப்பு உண்டு என இருந்துவிட்டேன்.

“இப்போது நல்ல காதலையும் கணவரையும் எதிர்பார்க்கிறேன். எனது வருங்காலக் கணவர் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவராக, குடும்பத்தாரை அனைத்து வகையிலும் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார் ரைசா வில்சன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்