தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் இணையும் ராஜமௌலி, கீரவாணி

1 mins read
886c1f0e-9bb5-41cc-b599-7d8453f81632
ராஜமௌலி, கீரவாணி. - படம்: ஊடகம்

இயக்குநர் ராஜமௌலியும் இசையமைப்பாளர் கீரவாணியும் மீண்டும் இணைந்துள்ளனர்.

தற்போது மகேஷ் பாபு நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இதில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதையடுத்து, ஒடிசாவிலும் தான்சானியாவிலும் பெரிய சண்டைக்காட்சி ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில், ஆப்பிரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடங்கப் போவதாகக் கூறியுள்ளார் ராஜமௌலி.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இசையமைப்பாளர் கீரவாணியுடன் இணைந்து புதுப் படத்துக்கான பாடல்களுக்கு மெட்டமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளாராம்.

இதேவேளையில், ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய அலுமினியம் தொழிற்சாலை ஒன்றில், மற்றொரு சண்டைக்காட்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருவதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்