ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், படப்பிடிப்பு தொடங்கி, நடந்து வருகிறது.
இந்நிலையில், சில முக்கியமான காட்சிகளை ஆப்பிரிக்க நாடான கென்யாவில் படமாக்க உள்ளனர். இதற்காக 120 பேரைக் கொண்ட படக்குழு விரைவில் கென்யா செல்லவிருக்கிறது.
இதையடுத்து, கென்யாவின் பிரதமர் துறை, வெளியுறவு அமைச்சின் செயலாளர்களை ராஜமௌலி அண்மையில் சந்தித்தார். அப்போது கென்யாவில் நடைபெறும் படப்பிடிப்புக்கு அந்நாட்டின் அனுமதியை அவர் பெற்றார்.
கென்யாவின் அழகான நிலப்பரப்புகளை தனது படத்தில் காண முடியும் என ராஜமௌலி கூறியுள்ளார்.
மகேஷ் பாபு நடிக்கும் இந்தப் புதுப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.1,100 கோடி என்றும் உலகம் முழுவதும் 120 நாடுகளில் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.