மூன்று பாகங்களாக உருவாகும் ராஜமவுலியின் ‘மகாபாரதம்’

1 mins read
24140cb1-1972-476d-bbd1-fdc9f55804e3
ராஜமவுலி. - படம்: ஊடகம்

தெலுங்கு நாயகன் மகேஷ் பாபுவின் படத்தை இயக்கி வரும் ராஜமவுலி, அடுத்து, மகாபாரதத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

அண்மையில், ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தனது ‘மகாபாரதம்’ படத்தில் நடிகர் நானி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி என்று அறிவித்திருந்தார் ராஜமவுலி.

இந்தப் படம் 10 பாகங்களாக உருவாகும் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், இதை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் மறுத்துள்ளார்.

‘மகாபாரதம்’ படத்துக்கான திரைக்கதையை இவர்தான் எழுதுகிறார்.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு என்று இன்னும் மதிப்பிடவில்லை. எனினும், ‘பாகுபலி’க்கு ஆனதைவிட, இரு மடங்கு செலவாகும் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்