தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமீர் கானுடன் ஜெய்ப்பூரில் ரஜினி

1 mins read
8e4be960-ecc2-4b91-b012-31aed6679da0
அமீர் கான், ரஜினி. - படம்: ஊடகம்

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி - அமீர் கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது ஜெய்ப்பூரில் ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு ரஜினி, அமீர் கான் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க உள்ளனர். இந்தப் படப்பிடிப்பு ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளது.

ஜெய்ப்பூர் படப்பிடிப்பைத் தொடர்ந்து மீண்டும் விசாகப்பட்டினம், ஹைதராபாத் ஆகிய ஊர்களிலும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளன. இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ‌‌ஷ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி ‘கூலி’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்