தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி, சுந்தர்.சி மீண்டும் கூட்டணி

1 mins read
22a0da32-08a4-4687-b597-aa56e0b6b64b
ரஜினி, சுந்தர்.சி. - படங்கள்: ஊடகம்

ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்குவார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் வெளியான ‘கூலி’ படத்தை அடுத்து, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெய்லர்-2’ அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

அதன் பின்னர் அவரும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் அதை தாம் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

ஆனால் ரஜினியோ அண்மையில் ஒரு பேட்டியில், “கமலுடன் நடிக்க எனக்கும் ஆசை உண்டு, ஆனால் அதற்கேற்ற கதை அமைய வேண்டும். இயக்குநர் யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை,” என்றார்.

இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கவில்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், ‘அருணாச்சலம்’ படத்தை அடுத்து, இயக்குநர் சுந்தர்.சியும் ரஜினியும் மீண்டும் கைகோக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு குறுகிய காலத் தயாரிப்பு என்றும் இந்த படம் முடிந்த கையோடு கமல், ரஜினி இணைந்து நடிக்கும் படம் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்