ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்க வேண்டுமென தயாரிப்புத் தரப்பான லைக்கா நிறுவனம் விரும்புகிறதாம்.
அந்த நிறுவனம்தான் ‘இந்தியன்-3’ படத்தை தயாரிக்கிறது. எனவே, கமல் இந்த அழைப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினியே நேரடியாக கமலைத் தொடர்புகொண்டு பேசி விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, ‘வேட்டையனுக்கு’ வாழ்த்து தெரிவிக்க, இசை வெளியீட்டு விழாவுக்கு கமல் வருவது உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.