தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யோகி பாபு பேட்டியால் மகிழ்ந்த ரஜினி ரசிகர்கள்

1 mins read
b9113af2-2a6e-4201-9857-85ff6af2704f
யோகி பாபு. - படம்: ஊடகம்

திருச்செந்தூர் முருகப் பெருமான்தான் தனக்கு தொடர்ந்து வெற்றியைத் தந்து வருவதாக பயபக்தியோடு சொல்கிறார் நடிகர் யோகி பாபு.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு கடந்த திங்கட்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

அதற்கு முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச்சென்ற அவருடன் அங்கிருந்த பக்தர்கள் பலர் செல்ஃபி படம் எடுத்துக் கொண்டனர்.

“திருச்செந்தூர் முருகப்பெருமான் எனக்கு தொடர்ந்து வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொடர்ந்து ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன்.

“முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படம் அருமையாக வந்துள்ளது. அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்,” என்றார் யோகி பாபு.

அவரது இப்பேட்டி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் போதெல்லாம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது யோகி பாபுவின் வழக்கம்.

குறிப்புச் சொற்கள்