ரஜினி பாராட்டிய ‘சாருகேசி’

ரஜினி பாராட்டிய ‘சாருகேசி’

1 mins read
944f0166-c9cd-4653-8444-20516b69993c
‘சாருகேசி’ படப் பாடல்களையும் முன்னோட்டக் காட்சிகளையும் வெளியிட்ட ரஜினி. - படம்: தினமலர்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய். ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘சாருகேசி’. இத்திரைப்படத்திற்குத் தேவா இசையமைத்துள்ளார்.

ஒய். ஜி. மகேந்திரன் மேடைகளில் நிகழ்த்திய சிறப்பு வாய்ந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சங்கராபரணம்’, ‘சிந்து பைரவி’ போன்ற புகழ்பெற்ற படங்களின் வரிசையில், செம்மொழி இசை, குடும்ப உறவுகள், மனித உணர்வுகள், கலை மரபுடைமை ஆகியவற்றின் சாராம்சத்தை இத்திரைப்படம் உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்பட்டது.

இத்திரைப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டக் காட்சிகளையும் அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

படக்குழுவினரின் அனைத்து முயற்சிகளையும் அவர் மனமுவந்து பாராட்டினார். அத்துடன், பண்பாட்டுச் செழுமையும் இசையும் நிறைந்த ஒரு சிறந்த கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டுவந்துள்ள தயாரிப்பாளர்களை வாழ்த்தியதோடு படம் வெற்றியடைய தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

‘சாருகேசி’ வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்