தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியப்பில் ஆழ்த்திய ரஜினி: ரித்திகா சிங்

1 mins read
7313fbd9-24f0-4aa9-8e5e-b3ff8666a7f1
ரித்திகா சிங். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் தனது திறமை மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை ரித்திகா சிங்.

2016ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ’இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கடந்த ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார்.

ரஜினியுடன் தான் நடித்த அனுபவத்தைச் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் பகிர்ந்திருந்தார்.

அதில், “திரையுலகில் சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் எனது மனதில் எப்போதும் இருக்கும். அத்தகைய ஒரு நடிகர்தான் ரஜினிகாந்த். முன்னணி நடிகராக இருந்தாலும், மற்றவர்கள்மீது அவர் காட்டும் அன்பும் பாசமும் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும்,’’ என்றார் ரித்திகா.

அவருடைய இந்தக் கருத்திற்குப் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்