1975ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி 50வது ஆண்டை நெருங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வரும் இவர், ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்து முடித்துவிட்டு, தனது பண்ணை வீட்டில் வைத்து தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை புத்தகமாக எழுதி வெளியிட உள்ளதாக திரையுலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பே சுயசரிதையை எழுத முயன்று, ஒரு சில காரணங்களால் அதனைக் கைவிட்டார். இப்போது மீண்டும் சுயசரிதை எழுதும் முயற்சியை கையில் எடுத்துள்ளார் ரஜினி.
முன்னதாக, ரஜினி - பாலசந்தர் உரையாடல் ஒன்றில் “வாழ்க்கை வரலாற்றை எழுதமாட்டேன். அதில் உண்மையை எழுதவேண்டும்,” என்று ரஜினிகாந்த் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.