மருத்துவர் வேடத்தில் ரஜினிகாந்த்: ‘தர்மன்’ படப்பிடிப்பு தொடங்கியது

மருத்துவர் வேடத்தில் ரஜினிகாந்த்: ‘தர்மன்’ படப்பிடிப்பு தொடங்கியது

1 mins read
310702d0-06a5-4084-b5ae-f36138ae0220
‘தர்மன்’ படத்தின் புதிய சுவரொட்டி. - படம்: இன்ஸ்டகிராம் / அஷ்வத் மாரிமுத்து
multi-img1 of 2

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து புதிய சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

‘மை கடவுளே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, முதன்முறையாக ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

அதிரடி சண்டைக் காட்சிகளும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்தில், ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள புதிய சுவரொட்டியில் ரஜினி மருத்துவர் உடையில் மிகவும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். இந்தச் சுவரொட்டி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துப் பரவி வருகிறது.

‘படையப்பா’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்களின் கலவை

படம் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசுகையில், “இந்தப் படம் ரஜினி சாருக்கு ஒரு மிரட்டலான படமாக இருக்கும். படையப்பா படத்தின் பிரமாண்டமும் வேட்டையாடு விளையாடு படத்தின் காட்சி அமைப்பும் கலந்த ஒரு கலவையாக ‘தர்மன்’ இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ரஜினியுடன் இணைந்து நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சகோதரர்கள் அதிரடியான சண்டைக் காட்சிகளை வடிவமைக்க உள்ளனர். ரஜினி-கமல் கூட்டணி, அனிருத் இசை என ஒட்டுமொத்த கோலிவுட்டின் உச்சக் கூட்டணியில் ‘தர்மன்’ தடம் பதிக்கத் தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே பெரிதும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்