ஓய்வு பெறும் ரஜினி?: ரசிகர்கள் அதிர்ச்சி

1 mins read
bcbf36c8-23c7-4fc4-8eda-c5442e247728
மனைவியுடன் ரஜினி. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகின் அடுத்த ரஜினி, அடுத்த விஜய் யார் என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், விஜய் அரசியல் களத்துக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து ரஜினியும் திரையுலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஒரு தகவல் உலா வருகிறது.

உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்றால் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனராம். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘கூலி’ படம் வெளியாகிறது.

இதையடுத்து, நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினி குறித்து லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

தனது கணவரின் ஓய்வுபெறும் தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னும் இதுகுறித்து யோசிக்கவே இல்லை என்றும் ஏதேனும் தகவல் தெரிந்தால்தானே தம்மால் பகிர முடியும் என்றும் பதிலளித்துள்ளார் லதா ரஜினி.

குறிப்புச் சொற்கள்