சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’, அவரது 3வது ரூ.500 கோடி வசூல் திரைப்படமாக அமைந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான முதல் நாளே ‘கூலி’ படம் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’.
அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாஹிர், ஷ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது.
மூன்று நாள்களில் ரூ.300 கோடி வசூலை வேகமாக எட்டிய தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
முன்னதாக இந்தச் சாதனையை விஜய்யின் ‘லியோ’ வைத்திருந்தது.
‘கூலி’ ஐந்து நாள்களில் அதை எட்டியது. இதன் மூலம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.500 கோடி மைல்கல்லைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.500 கோடி கிளப்பில் நுழைந்த நான்காவது தமிழ் படமாகவும் ரஜினிகாந்தின் மூன்றாவது படமாகவும் ‘கூலி’ அமைகிறது.