தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரமுக்கு சம்பளம் ரூ.50 கோடி

2 mins read
5267fb15-327c-4578-83ea-61f8b662afca
படம்: டுவிட்டர் -

நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ரஜினிகாந்தின் 170வது படமாகத் தயாராகவிருக்கும் அந்தப் படத்தை லைக்கா நிறுவனம் மாபெரும் செலவில் படமாக்க முடிவுசெய்துள்ளது. அது தொடர்பாக முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக, புகழ்பெற்ற முன்னணி நாயகர்களில் ஒருவரை இயக்குநர் தேடி வருகிறார். அந்த வரிசையில் அவர் சியான் விக்ரமைத் தேர்வுசெய்துள்ளார். அதுகுறித்து விக்ரமிடம் அவர் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கதாநாயகனுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரமுக்கு ஒரே தடவையாக ரூ.50 கோடி சம்பளம் கொடுப்பதற்கு லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க விக்ரம் தயங்குவதாகச் சில ஊடகங்களும், படத்தின் தனக்காக கதாபாத்திரம் பிடித்துவிட்டதால், விக்ரம் நடிக்க ஒத்துக்கொண்டு ஐம்பது கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்று வேறு சில ஊடகங்களும் தெரிவித்துள்ளன. ஆனால், இதுகுறித்து நடிகர் விக்ரம் எதுவும் கருத்துச் சொல்லவில்லை.

ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அது எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் கடினமான உழைப்பை நடிகர் விக்ரம் வெளிப்படுத்துவார்.

ரஜினிகாந்த் இப்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தநிலையில் அந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கிவரும் 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.‌‌ அண்மையில் இந்தப் படம் தொடர்பான பதாகை ஒன்றும் வெளியாகி விவாதங்களுக்கு ஆளானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ள படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமுக்கு ரூ.50 கோடியா என கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக உள்ளதாம். இருப்பினும், அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திரஜினி