சினிமாவில் எது, எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
‘கர்ணன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் ரஜிஷா விஜயன். ‘ஜெய்பீம்’ படத்திலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்த அவரை, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ‘பைசன்’ படத்திலும் நடிக்க வைத்திருந்தார்.
தமிழிலும் மலையாளத்திலும் கவர்ச்சிக்கு இடம்கொடுக்காமல் குடும்பப் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருவது குறித்து பல பேட்டிகளில் பெருமையுடன் ரஜிஷா குறிப்பிடுவதுண்டு.
இந்நிலையில், மலையாளத்தில் ‘மதிஸ் கமரணம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள இவர், அதில் இடம்பெற்றுள்ள ‘பொமலா தாமரை’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம்.
ஏற்கெனவே பல நாயகிகள் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி அசத்தி இருந்தாலும், ரஜிஷாவின் இந்தப் பாடலும் அதற்கான அவரது நடனமும் தனி ரகம் என்கிறார்கள் மலையாள ரசிகர்கள்.
ஆனால், அவரோ சினிமாவில் ஒரு கதாபாத்திரம் என்ன கேட்கிறதோ அதைக் கொடுப்பது நடிகர்களின் கடமை என்று விளக்கம் அளித்துள்ளார்.

